Sunday, July 27, 2014

ஆட்கடத்தும் செய்தியை எதிர்த்தல் / Operation Sovereign Borders

கப்பல் மூலம் ஆட்களைக் கடத்திவருவதனை முறியடிக்கவும், ஆஸ்திரேலியாவின் எல்லைகளைப் பாதுகாக்கவும் என்றுமில்லாதவாறு மிகவும் கடுமையான கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் நிறைவேற்றிவருகிறது.

Operation Sovereign Borders (OSB) என்பது வள்ளங்களை நிறுத்தவும், குற்றவாளிகளின் கைகளிலே தமது உயிர்களை கடலிலே பணயம் வைப்பதனைத் தடுக்கவும் அத்துடன் ஆஸ்திரேலியாவின் நேர்மையான குடிவரவு திட்டத்தினைப் பாதுகாப்பதற்குமான ஒரு இராணுவமுனைப்புடனான கரையோர பாதுகாப்பு முன்னேற்பாடாகும்.

வீசா இல்லாமல் படகில் பயணிக்கும் புகலிடம் கோருவோர் ஆஸ்திரேலியாவைச் சென்றடையார். குடும்பத்தோர், சிறுவர்கள், துணையின்றி தாமாகவரும் சிறுவர்கள், படித்தவர்கள், தேர்ச்சிபெற்ற தொழிலாளர் போன்ற எல்லோருக்குமே இந்த விதிகள் பொதுவானவை. விதிவிலக்குகள் கிடையாது.

ஆஸ்திரேலியா அதனுடைய எல்லைகளைப் பாதுகாப்பதில் மிகவும் கடுமையாக உள்ளது என்பதுடன் சட்டவிரோதமாக படகிலே வர முயற்சிப்பவர்களைத் தடுத்துநிறுத்தும்.

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுமூலம் பயணம் செய்ய ஆலோசனை செய்பவர்களுக்கு, சட்டங்கள் மாறிவிட்டன; ஆட்கடத்துவோரின் பொய்களை நம்பவேண்டாம்; அத்துடன் ஆஸ்திரேலியாவை தமது வாழ்விடமாக்க வழிகிடையாதென தெரிவிப்பதற்காக அதிகமான பல கரைகடந்த செய்திஅறிவித்தல் நடவடிக்கைகளை OSB Joint Agency Taskforce மேற்கொண்டுவருகிறது.

விதிகள் மாறியிருக்கின்றன. உண்மைகளைச் சோதித்தறியுங்கள்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் கடல் வழியான ஆட்கடத்தலுக்கு எதிராகப் போராடவும் அவுஸ்திரேலியாவின் எல்லைகளைப் பாதுகாக்கவும் எப்போதையும் விடக் கடினமான எல்லைப் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. படகு மூலம் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவில் நுழைய முயலும் எவரும் ஒருபோதும் அவுஸ்திரேலியாவைத் தமது வாழிடமாக்க மாட்டார்.

Operation Sovereign Boarders (இறைமையுள்ள எல்லைகள் நடவடிக்கை) என்பதன் கீழ், சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் எந்தவொரு கலத்தையும் வழி மறித்து எமது நீர் எல்லைகளுக்கு அப்பால் பாதுகாப்பாக அகற்றுவது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கையும் செயற்பாடுமாகும்.

விசா ஒன்றில்லாமல் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டோர் அவுஸ்திரேலியாவில் அதனை முடிவாக்க மாட்டர்; அவர்கள் செயற்படுத்தலுக்காக நாவுருவுக்கோ பப்புவா நியூகினிக்கோ அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்களால் வேலை செய்ய இயலாதிருக்கும் என்பதுடன் தமது கோரிக்கை செயற்படுத்தப்படும் வரை நீண்ட காலம் காத்திரக்கலாம்.

அவுஸ்திரேலியா எப்போதையும் விட ஆகக் கடினமான எல்லைப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்டிருக்கிறது. விசா ஒன்றில்லாமல் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வரும் எவருக்கும் மறு அறிவித்தல் வரை தற்காலிக அல்லது நிரந்தரப் பாதுகாப்பு விசாக்கள் வழங்கப்பட மாட்டா என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

விதிகள் குடும்பங்கள், சிறுவர், துணையற்ற சிறுவர், கற்றோர், திறமைசாலிகள் என எல்லோருக்கும் பொருந்தும். விதிவிலக்குகள் இல்லை..

உங்களது பணத்தை வீணாக்காதீர்கள் - ஆட்கடத்தற்காரர்கள் பொய்யுரைக்கின்றனர்
ஆட்கடத்தற்காரர்களுக்குக் கட்டணம் செலுத்துவதன் மூலம் உங்களது குடும்பத்தினரதும் நண்பர்களினதும் பாதுகாப்பை இடருக்கு உள்ளாக்காதீர்கள். விசா ஒன்றில்லாமல் படகு மூலம் பயணம் செய்வது அவர்கள் இங்கே அவுஸ்திரேலியாவிற் குடிமர்த்தப்பட மாட்டார்களென்பதை உறுதிப்படுத்தும்.

அவர்கள் அகதிகளென ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர்கள் அவுஸ்திரேலியாவிற் குடியமர்த்தப்பட மாட்டர்.

ஆட்கடத்தற்காரர்களை நிறுத்தவும் கடலில் மேலும் உயிர்கள் இழக்கப்படுவதை நிறுத்தவுமே இந்நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.படுத்தப்பட்டுள்ளன.

உங்களது குடும்பத்தையும் நண்பர்களையும் பாதுகாப்பாக வைத்திருங்கள் - சரியான வழியில் வருமாறு அவர்களுக்குக் கூறுங்கள்
சட்டப்படியான புலம் பெயர்வு மூலம் நீங்கள் இன்னமும் அவுஸ்திரேலியாவுக்கு வரலாம். புகலிடக் கோரிக்கையாளர்கள் மனிதாபிமான, திறமையான வேலையாள் அல்லது குடும்பப் புலம் பெயர்வுத் திட்டங்கள் மூலம் புலம் பெயர்வதாயின், அவர்கள் அவுஸ்திரேலியாவில் நிரந்தரக் குடியிருப்புக்காக இன்னமும் செயற்படுத்தப்படுகின்றனர்.

தமது குடும்பம் அவுஸ்திரேலியாவுக்கு வர அனுசரணை வழங்கும் போது, அவுஸ்திரேலியாவுக்கு சட்டப்படி புலம் பெயரும் ஆட்களுக்கு முன்னுரிமையளிக்கப்படுகிறது.

விசா ஒன்றைக் கண்டு கொள்ளுங்கள்
உங்களுக்கும் உங்களது குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் சரியான விசாக்கள் எவையெனக் கண்டு கொள்ளுங்கள்http://www.customs.gov.au/site/Translations/tamil-o.asp